Saturday, April 27, 2013


வார்த்தைப்
பகிர்தலின்
போது
நினைவுக்கு
வந்தது
தவறவிட்ட
பொக்கிசத்தை
எப்படி
மீண்டும்
பெறுவது
தவற விட்டத்தை
5 வருடங்களுக்குப்
பிறகும்
மாறாத
வடுக்களோடு
ஈரத்தோடு
இருக்கிறது
குறுதி
பொழிவதன்
நிறுத்தம்,
தாவரத்தின்
சாபம்
வேலிக்குள்
இருக்கிற
அதன்
முரணை
உடைத்து விட
முடியாது
மனசுக்கும்
விழிகளுக்கும்
இருக்கின்ற
வாக்கை
எதுவாவது
மீறுவது
நிச்சயம்
இரண்டையும்
ஏமாற்றி
உடைந்தது
கண்ணீர்
விதிகளின்
கட்டுமானங்களை
அசைத்துப்
பார்க்கின்ற
துணிச்சல்
மனசுக்குத்
தூரம்
ஆசையோடு
நேசிக்கிற
ஒவ்வொரு
தருணமும்
நிஜமாகி விட்டால்.....
நினைவுக்கு வந்த உன் எண்ணங்களைக் கண்ணீரோடும், கவிதைகளோடும்

No comments:

அக்கம் பக்கம்