Thursday, April 18, 2013

ஒரு நேசத்தின் அளவை

 ஒரு
நேசத்தின்
உச்சத்தை
எவ்வாறு
உணர்வது

நேசத்தின்
வெளிப்பாடு
உறைந்து
உறுதியாவதற்குள்
குலைந்து
விடுகிறது
சில
நேரம்
 
சுகித்தலின்
தேவை
குறையாது
இருப்பதால்
சகித்தலின்
தேவையும்
நீளுகீறது

இப்படியாக
நீளுகிற
ஒரு
நேசத்தின்'
உச்சத்தை
எவ்வாறு
உணர்த்துவது

மொழிகள்
குறையோடு
இருப்பது
அன்பின்
ஊனமோ

மொழியின்
ஊனம்
சாத்தியமில்லை
மிருகத்திற்கு

 தீண்டல்,
அணைத்தல்,
வருடுதல்,
முத்தமிடுதல்,
மௌனமாயிருத்தல்
என
விளையும்
அன்பு
நிறைவானது....

சூன்யத்தின்
நிறைவு
அன்பு





















No comments:

அக்கம் பக்கம்