இணைந்தும்-பேசி
பிணைந்தும்
ஒர் நாளும்
நேர்ந்ததில்லை
பால்கணியின்
வளாகத்தில்
நிகழும்
பார்வைகளோடு
மட்டுமே
நிகழ்ந்த
நேசங்கள்
அவை
உறங்குவதும்
கூடி கூடி
மகிழ்வதும்
ஒரு
நெகிழ்வான
நட்பு
மனிதக் கூட்டம்
அழிந்தொழிந்த
அந்திக்காலங்களில்
அக்றிணை நான்
உயர்திணை அவை
ஒரே புள்ளியில்
சங்கமித்த
பௌர்ணமி
நிமிடங்கள்
அவை
ஒரு
விடியல்
பொழுதின்
கடையில்
தூக்கம்
கிழிக்க
புறப்பட்ட
கண்கள்
பால்கணியின்,
மரக்கிளையில்
கிழந்து
தொங்கிய
இறக்கைப் பிணங்களோடு,
அதிர்ந்துபோனது
உதிர்ந்துபோனது
விரிந்த
விருட்சம்
சரிந்து
கிடந்ததை
விழிகள்
வெறித்துப்
பார்த்து
உள்ளே
மனசுக்குள்
சொல்லியது
மரித்தது
மரமல்ல
மனிதன்
No comments:
Post a Comment