Thursday, April 18, 2013

நாய்களும் அதன் ஆன்மாவும்

பரப்பரப்புடன்
விரைந்த
மகிழுந்தில்
திடீரென்று
நின்ற
பாடலின்
காரணி
குறித்து
குவிந்தது
அனைத்துப்
பார்வைகளும்

ஒரே
நேரத்தில்
குறைத்த
வேகத்தில்
அதிகமானது
படப்படப்பின்
ஆசைகள்

நழுவிய
வாய்ப்பின்
அதிருப்தி
உணர்ந்தலறியது
குரல்...

நெருங்கிய
இடைவெளியில்
சுருங்கிய
இதயம்
நின்று
நிதானிக்க
அவகாசம்
தேவையானது

நாயொன்று
மோதி
சிதைந்ததில்
பதைத்துப்
போன
இதயம்
ஜீவகாருண்யம்
நோக்கி
பயணமானது

குவிந்த
பார்வைகள்
ஒவ்வொன்றாய்
நலிந்து
போன
நாயின்
சடலத்தின்
மீது
பிரியம்
புதைத்தன


தூரம்
கடந்த
பின்னும்
ஒவ்வொரு
முறையும்
 சாலையில்
அதன்
ஆன்மா
துரத்துகிறது
குரைத்தவாறு.....


















No comments:

அக்கம் பக்கம்