இந்தியர்களுக்கு வேண்டியது என்ன?
- இந்த நாட்டில் பிறந்த குடிமகனாக மதிக்கின்ற பண்பு.(இரண்டாம் தர குடிமகன் என்று நிலவுகின்ற சிந்தனையை வேரறுக்க வேண்டும்)
- இந்த நாட்டுக் குடிமகனுக்குக் கிடைக்கின்ற எல்லா உரிமைகளையும் சரியாக,பாரபட்சமின்றி நேர்மையாக வழங்குதல்.(போராட்டத்தால் அல்ல,அரசியல் சாசனத்தில் விதிக்கப்பட்ட உரிமையின் படி)
- தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்குதல்.
- தேசியப் பள்ளிகளைப் போல்,தமிழ்ப் பள்ளிகளையும் முழு உதவி மற்றும் எல்லா வசதிகளையும் பெற்ற பள்ளிகளாக மாற்றுதல்.
- தமிழ் மொழியை மேம்படுத்த dewan bahasa pustaka போன்று தமிழ் மொழி வாரியம் அல்லது காப்பகம் என்று அமைத்து மொழியைப் பேணவும்,காக்கவும் வழி செய்திட வேண்டும்.
- தாய்மொழி கல்விப் பள்ளியில் நன்னெறிக் கல்விக்குப் பதிலாக முறையாக வகுக்கப்பட்ட சமயக் கல்வி திட்டம் அறிமுகப்படுத்த வேண்டும்.அரசு அங்கீகரிக்கப் பட்ட சமய ஆசிரியர்கள் இதனைப் போதிக்க வேண்டும்.
- பாடத்திட்டங்களுக்குப் பொருத்தமான பாடப் போதனைகளின் பயிற்சி கட்டுகள் மற்றும் உபகரணங்கள் தேசியப் பள்ளிகளைப் போல் அளிக்க வேண்டும்.
- பொருளாதாரத்தை சமமாக பங்கிட்டு அனைத்து இனங்களும் பங்கிட்டுக் கொள்ள வழிவகுத்தல்.(மிகவும் பின் தங்கியுள்ள இனத்திற்கு சிறப்பு ஒதுக்கீடு செய்தல்.(எ.கா இந்தியர்)
- இந்தியர்களின் சொத்து உடமையை அதிகரித்தல்(சிறப்பு நிதி ஒதுக்கீடு)
- இந்துகளுக்கு என இந்து மத துறையை,இந்தியர்களின் சிறப்பு அமைச்சின் கீழ் அமைக்க வேண்டும்
- இந்து கோயில்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.இந்துக்களைப் பாதிக்கும் வகையிலும் ,புண்படும் வகையில் பேசும்அரசு அதிகாரிகள்,கல்விமான்கள், அரசியல் வாதிகள் பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும்.(இந்தியர்களை ஏளனமாக சித்தரிக்கும் பிற இனத்தவர்களுக்கு)
- இந்திய இளைஞர்களுக்கு அரசியல் சாராத முறையான வழியில் கல்வி வசதிகள்,கல்விக் கடனுதவிகள்,வாய்ப்புகள் வழங்கி அவர்களை skills upgrading trainings மேன்மையுறச் செய்ய வேண்டும்.
- இந்திய இளைஞர்களிடம் நிலவும் வன்முறை போக்கினைக் குறைக்க அவர்களைக் கண்டறிந்து.பன்முக திறனாளிகளாக மாற்றியமைத்து முறையான வாழ்வளிக்க வழி வகுக்க வேண்டும்.
- அரசு வேலைகளில்,கல்வி நிறுவனங்களில் நேர்மையான நேர்காணல், பாரபட்சமின்றி பதவி உயர்வு, உயர்கல்வி வாய்ப்பு, பெரும் பதவி வாய்ப்பு,(கல்வி நிறுவனங்களின் இயக்குனர்,துணை இயக்குனர்,பேராசிரியர், விரிவுரையாளர் பதவி உயர்வு,ஞாயமான சிறப்பு கௌரவிப்புகள்,மாநில கல்வி இலாகாவில் தமிழ் மொழி பரிவு தவிர்த்து பிறத் துறைகளிலும் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள்.
- அரசு இலாக்காவில் அதிகமான இந்தியர்கள்.தமிழ்ப்பள்ளிகளில் தமிழர்களை நிர்வாக அலுவலராகவும்,துணை அலுவலராகவும் நியமித்தல்.
- வணிக ,வியாபார வாய்ப்புகளை அதிகரித்தல். குறைந்த /வட்டியில்லாத கடனை அறிமுகப்படுத்துதல்
- இந்தியர்களின் குடியுரிமையை அதிகப்படுத்துதல் அல்லது நிச்சயித்தல்
இதைக் கேட்பதற்கு இந்தியர்கள் /தமிழர்கள் யார்?
ஞாயமான கேள்வி......
ஒரே பதில்
இங்கேயே பிறந்து,இங்கேயே வளர்ந்து,இந்த நாட்டில் வரியையும் கட்டி,நாடு வளர்ச்சியடைய உழைத்து ஓடாய் தேய்ந்து ,ஆனா ஏணி மாதிரி நாங்க வளர்ச்சியடையமா எவன் எவனயோ ஏற்றி விடு ! எவ்வளவு எங்க இனத்தையும்,மதத்தையும் அவமானப்படுத்தினாலும் தாங்கி கொண்டு நீங்க ஓட்டு கேட்க வரும்போது செருப்பைக் கழற்றி அடிக்காம சிரிச்சுக்கிட்டே இருக்கும் இளிச்சவாய் தமிழன் நாங்கதான் என்னும் ஒரு தகுதி போதாதா!!!!!!!!!!!!!!!!!!!!இந்தக் கேள்வி கேட்க................
எவன் நம்ம உணர்வைப் புரிஞ்சு ,மதிச்சு,நம்மை குடிமகனா நடத்துறுனோ அவனுக்கு போடுவோம் ஓட்டு............அடுத்தவன் சோற்றை நாங்க கேட்கல எங்க சோற்றை நாங்களே எடுத்துகிறோம்
No comments:
Post a Comment