Tuesday, May 14, 2013

புத்தனைக் காணோம்

தொலைந்த
புத்தனைத்
தேடி
புறப்பட்டது
ஒரு
கூட்டம்

தெரு ,
சந்து ,
சாலை,
குடிசை,
மாளிகை,
அலுவலகங்கள்
என
நீளுகின்ற
பட்டியலில்
எங்கும்
காணோம்
புத்தனை


திசையெங்கும்
திரிந்தும்
கிடைக்கவில்லை
புத்தன்


ஒவ்வொரு
முகங்களிலும்
யாரோ
யாரோ
பதிந்திருக்கிறார்கள்
புத்தனைத்
தவிர


அலைந்தலைந்து
வந்தமர்ந்த
திடலோரத்தில்
கண்டெடுத்தனர்
புத்தனை
தன்
குட்டிகளுக்குப்
பால்
கொடுக்கும்
நாயிடம்








No comments:

அக்கம் பக்கம்