Tuesday, September 10, 2013

ஆளுயரக் கண்ணாடி

அனைத்துக்
கண்ணாடிகளும்
உண்மையைப்
பேசுவதில்லை

எல்லா
நேரமும்
அழகாய்க்
காட்டுகிற
கண்ணாடிகள்
நிச்சயமாய்ப்
பொய்
நிறைந்தவைதான்.

அழுக்குகள்
அடுக்கிய
கிடங்கோடு
இருக்கிற
மனசை
அழகாய்க்
காட்டுகிற
கண்ணாடிகள்
சதி
நிரம்பியவை

மீண்டும்
மீண்டும்
அழுக்கை
மறைத்து
அழகை
காட்டிய
படி
நிற்கின்ற
மனிதனுக்கு
காத்திருக்கிறது
கண்ணாடியின்
கொலைக்கார
அவதாரம்

இறப்புச் செய்தி I

கடவுள்
இறந்துவிட்டார்
செய்தி
ஊரெங்கும்
பரவியது

தட்டுத்
தடுமாறி
சேர்ந்தது
கூட்டம்

வழக்கம்
போல்
கடவுளின்
இறப்புக்
குறித்து
ஆளுக்கொரு
கதையளந்தார்கள்

கடவுள்
இறந்ததைக்
கண்டு
சிலர்
முகநூலிலும்
டிவிட்டரிலும்
துக்கம்
அனுசரித்தனர்.

மதுக்கடைக்களில்
மதுக்கள்
இலவசமாய்
வழங்கப்பட்டது

இன்றோடு
பாவக்
கணக்கு
தீர்ந்ததாய்ச்
சிலாகித்தனர்
சிலர்.

இறைச்
சன்னிதிகளுக்கு
கூட்டம்
குறைவதைத்
துக்கமாக
அறிவித்தது
உலகச்
செய்திகள்

மதங்கள்
மெல்ல
மதமிழப்பதை
உறுதிசெய்தன
மதங்கள்

தம்
மதத்தில்
மட்டுமே
கடவுள்
இருக்கிறாரென
கொக்கரித்தவர்கள்
பதுங்கியே
நின்றனர்

உலகம்
கடவுளின்றி
அப்படியே
இருந்தது
பழைய
பாவங்களுடன்

இருளில்

இருட்டைத்
தவிர
ஒவ்வாது
உனக்கும்
எனக்கும்


சுகம்
தர
நீ
சுகித்திட
நான்
மாற்றி
மாற்றி
நேர்க்கோட்டில்
இருவரும்


புதைந்திட்டப்
பிறகு
விடுவிக்க
புலன்கள்
பெருமூச்சின்
இடைவெளி
கடந்து

கலவியின்
தடங்களின்றி
விரைந்து
விடுவித்து

மீண்டும்
நானாகி
கணவானகிறேன்
மனைவிக்கு.....

Monday, July 8, 2013

அமைதிக்கான ஏற்பாடு

அமைதிக்கான
எல்லா
ஆயுத்தங்களும்
நடந்தது


உரை,
பரிசு,
புறா,
வெள்ளைக்
கொடியென
அணிவகுத்து
நின்றிருந்த
அத்தனையுள்ளும்
சந்தேகங்கள்
முகாமிட்டிருந்தன.

அமைதிக்கான
முன்னேற்பாடுகளாய்
அது
இல்லை


வெள்ளைப்
பூக்களை
அடுக்கி
வைத்திருந்த
பாங்கில்
வெள்ளைச்
சிறுமி
கொள்ளைப்
போனாள்.

காலத்தோடு
தொடங்கிற்று
புறாவின்
விடுவிப்பு

வெள்ளைப்
பலூன்களின்
பறத்தல்
லேசாய் அதிரச் செய்தது அமைதியை

உணர்வற்று
கிடக்கின்ற
நிகழ்வை
மெல்ல
உசுப்பியது
சிற்றுரை  

சிற்றுரையின்
இறுதியில்
உரக்கச்
சொன்னார்
பேச்சாளார்
இன்னும்
அதிக
ஆயுதங்களால்
அமைதி
காக்கப்படும்...
























Monday, June 3, 2013

விருப்பங்களின்றி
தேர்வுக்குப்
படித்தேன்
நூட்களை
வாஞ்சையோடு
உனை
தினமும்
படிக்கிறேன்
இன்னும்
முடிக்கவில்லை

நீ -3

வலிகளின்
வழியில்
நிறைந்திருக்கும்
வெம்மையினை
தாளாது
தவிக்கிறது
.............

நீ -2

கல்லாதவர் கண்கள் புண்ணென்று சொன்னார்-உனைக்
காணாத கண்களும் புண்ணென்று சொல்வேன் - உன்
கண் முன்னே நான் எங்கே வெல்வேன்-அழகாய் உனைப் 
படைத்தவனை நிச்சயமாய் கொல்வேன்

அக்கம் பக்கம்