Tuesday, September 10, 2013

இறப்புச் செய்தி I

கடவுள்
இறந்துவிட்டார்
செய்தி
ஊரெங்கும்
பரவியது

தட்டுத்
தடுமாறி
சேர்ந்தது
கூட்டம்

வழக்கம்
போல்
கடவுளின்
இறப்புக்
குறித்து
ஆளுக்கொரு
கதையளந்தார்கள்

கடவுள்
இறந்ததைக்
கண்டு
சிலர்
முகநூலிலும்
டிவிட்டரிலும்
துக்கம்
அனுசரித்தனர்.

மதுக்கடைக்களில்
மதுக்கள்
இலவசமாய்
வழங்கப்பட்டது

இன்றோடு
பாவக்
கணக்கு
தீர்ந்ததாய்ச்
சிலாகித்தனர்
சிலர்.

இறைச்
சன்னிதிகளுக்கு
கூட்டம்
குறைவதைத்
துக்கமாக
அறிவித்தது
உலகச்
செய்திகள்

மதங்கள்
மெல்ல
மதமிழப்பதை
உறுதிசெய்தன
மதங்கள்

தம்
மதத்தில்
மட்டுமே
கடவுள்
இருக்கிறாரென
கொக்கரித்தவர்கள்
பதுங்கியே
நின்றனர்

உலகம்
கடவுளின்றி
அப்படியே
இருந்தது
பழைய
பாவங்களுடன்

No comments:

அக்கம் பக்கம்